மூன்று ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை திறக்க கோரிக்கை
மூன்று ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை திறக்க கோரிக்கைநாமக்கல், நவ. 8-நாமக்கல் அருகே, மூன்று ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், ரெட்டிப்பட்டி ஊராட்சி மற்றும் தோகநத்தம் கிராமத்தில், துாய்மை பாரத இயக்கம் சார்பில், 2021ல், 5.25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய கழிப்பிடம் கட்டடமும், அதே போல் 15வது நிதி குழும மானியத்தின் கீழ், ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சுகாதார வளாகம், கட்டி முடிக்கப்பட்டும், புதுப்பித்தும் மக்கள் பயன்பாட்டிற்கு விடாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக பூட்டி நிலையிலே உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள தெரு விளக்குகள் எரிவதில்லை என புகார் எழுந்துள்ளது.எனவே, அப்பகுதி மக்களின் சுகாதார நலன் கருதி பூட்டப்பட்டுள்ள கழிவறைகளை உடனடியாக திறந்து, இரவு நேரத்தில் தெரு விளக்குகளை எரியவிட வேண்டும்.