உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மத்திய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்திய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்திய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்நாமக்கல், டிச. 25-பார்லிமென்ட் கூட்டத்தொடரில், அம்பேத்கார் குறித்து விமர்சனம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, நேற்று தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் குமரவேல் தலைமை வகித்தார். அதில், 'பார்லிமென்ட் கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து விமர்சனம் செய்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், அவர் பதவி விலக வேண்டும்' என, வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாவட்ட செயலாளர்கள் வினோத் சேகுவேரா, கார்த்திக், மாநில தலைமை நிலைய செயலாளர் முகிலரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை