உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வி.ஏ.ஓ.,-வை தாக்கியவரை கைது செய்ய ஆர்ப்பாட்டம்

வி.ஏ.ஓ.,-வை தாக்கியவரை கைது செய்ய ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: நருவலுார் கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்தியவரை கைது செய்யக்கோரி, நாமக்கல்லில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்-தது.ப.வேலுார் தாலுகா, கீரம்பூர் பிர்காவிற்குட்பட்ட நருவலுாரில் வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வருபவர் ராமன். கடந்த, 4ல் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள மரத்தை, அதே பகுதியை சேர்ந்த திருமுருகன் என்பவர் அகற்றினார். இதுகுறித்து வி.ஏ.ஓ., ராமன் கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வி.ஏ.ஓ., ராமனை, திருமுருகன் தாக்-கியுள்ளார்.இதுகுறித்து, வேலகவுண்டம்பட்டி போலீசில் புகாரளிக்கப்பட்-டது. இந்நிலையில், நாமக்கல் தாலுகா அலுவலகம் முன் அனைத்து வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு, நாமக்கல் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். இதில், வி.ஏ.ஓ., ராமனை தாக்கிய திருமுருகனை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ