உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தபால் துறையே தினசரி ஆதார் திருத்தம் செய்:மா.கம்யூ., எழுதி வைத்த தட்டியால் பரபரப்பு

தபால் துறையே தினசரி ஆதார் திருத்தம் செய்:மா.கம்யூ., எழுதி வைத்த தட்டியால் பரபரப்பு

எலச்சிபாளையம்;எலச்சிபாளையம் தபால் நிலையத்தில், 'தினசரி ஆதார் திருத்தம் செய்ய வேண்டும்' என, மா.கம்யூ., கட்சியினர் எழுதி வைத்த தட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.அனைத்து தபால் அலுவலகங்களிலும், ஆதார் திருத்தப்பணி தினசரி செய்ய வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. எலச்சிபாளையம் தபால் நிலையத்தில், ஆதார் திருத்த பணிகள் வாரத்தில் ஒருமுறை மட்டுமே, அதுவும் சில மணி நேரங்களில் முடித்து விடுகின்றனர். இதனால், தபால் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் போதிய நேரம் கிடைக்காததால் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். சில நேரம், 'சர்வர்' பிரச்னை காரணமாக, நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இதனால், கூலித்தொழிலாளர்கள், பல நாட்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அழைய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.நேற்று காலை, 6:00 மணிக்கே தபால் அலுவலகத்தில், 50க்கும் மேற்பட்ட மக்கள் ஆதார் திருத்தத்திற்காக காத்திருந்தனர். காலை, 9:00 மணிக்கு வந்த அதிகாரிகள், ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும், 'டோக்கன்' வழங்கி முடித்தனர். சிலருக்கு, 'டோக்கன்' கிடைக்கவில்லை. இந்நிலையில், மா.கம்யூ., கட்சி சார்பில், நேற்று, எலச்சிபாளையம் தபால் அலுவலகம் முன், 'தபால் துறையே, ஆதார் திருத்தம் தினசரிசெய். பொதுமக்களை அலைக்கழிக்காதே, மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் தபால் துறையே' என, கையால் எழுதப்பட்ட வாசகம் அடங்கிய தட்டியை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ