மேலும் செய்திகள்
காளியம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம்
14-Sep-2026
ராசிபுரம்:ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி முனியப்பன்புதுார் பகுதியில் மதுரைவீரன், மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது. முன்னதாக, நேற்று 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். மேளதாளம் முழங்க, 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதுரைவீரன், மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலம் சென்றனர். அங்கு, சுவாமிக்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
14-Sep-2026