உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

ராசிபுரம்:ராசிபுரத்தில் உள்ள, நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில், ஐப்பசி மாத திருத்தேர்விழா கடந்த அக்., 20ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் பல்வேறு கட்டளைதாரர்கள் சார்பில், அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரங்கள் நடந்து சுவாமி திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து கம்பம் நடும் விழா, பூவோடு எடுத்தல், கொடி ஏற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று முன்தினம் பொங்கல் வைபவம் நடந்தது. இரவு அக்கினி குண்டம் பற்ற வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை, ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் நிற உடை அணிந்து, வரிசையில் நின்று அக்னி சட்டி மற்றும் அலகு குத்துதல் ஆகியவற்றுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை தேர்திருவிழா நடந்தது.மேலும் திருவிழாவை முன்னிட்டு இன்னிசை கச்சேரி மற்றும் சுவாமி வேடம் அணிந்து பக்தர்கள் நடனமாடியபடி வந்தனர். ராசிபுரம் நண்பர்கள் குழு அறக்கட்டளை சார்பில், பக்தர்களுக்கு தண்ணீர், பால், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.* இந்நிலையில், தேர்த்திருவிழா நிகழ்ச்சி மாலையில் நடந்தது. பத்திர பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர். பஸ் ஸ்டாண்டில் இருந்து தொடங்கி, சின்ன கடைவீதி வழியாக சென்று இறுதியாக கடைவீதியில் நிறுத்தப்பட்டது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ