மேலும் செய்திகள்
அடிப்படை வசதியில்லாத பழைய பஸ் ஸ்டாண்ட்
05-Jul-2025
நாமக்கல்: நாமக்கல் நகரில் செயல்பட்டு வந்த பஸ் ஸ்டாண்ட், கடந்த, 2024 நவ., 10 முதல் முதலைப்பட்டிக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. நகரில் உள்ள பழைய பஸ் ஸ்டாண்ட், தற்போது டவுன் பஸ் ஸ்டாண்டாக செயல்பட்டு வருகிறது. வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து டவுன் பஸ் மூலம் புது பஸ் ஸ்டாண்ட் செல்கின்றனர். இந்நிலையில், புது பஸ் ஸ்டாண்டில், மூன்று இடங்களில் ஆண்கள், பெண்களுக்கான கட்டண கழிப்பிடம் உள்ளது. அதேபோல், ஆண்களுக்கு மட்டுமே இலவச கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பெண்களுக்கு இலவச கழிப்பிடம் இல்லை. இதனால், கட்டண கழிப்பிடத்துக்கு செல்லும் நிலை உள்ளது.இதுகுறித்து, பெண் பயணிகள் கூறியதாவது:நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து, அரசு பஸ்சில் இலவச பயணம் மூலம் புது பஸ் ஸ்டாண்ட் வருகிறோம். ஆனால், இங்கு பெண்கள் கழிப்பிடம் செல்வதற்கு, 10 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது. இங்கு ஆண்களுக்கு இலவச கழிப்பிடம் உள்ளதுபோல், பெண்களுக்கும் இலவச கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
05-Jul-2025