மேலும் செய்திகள்
பள்ளியில் புத்தகம் வினியோகம்
03-Jan-2025
மாணவர்களுக்கு 3ம் பருவபாட புத்தகம் வழங்கல்நாமக்கல், ஜன. 3-நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் நேற்று வழங்கப்பட்டன. அரையாண்டு விடுமுறைக்கு பின், நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. டிச., மூன்றாவது வாரத்தில் அரையாண்டு தேர்வுகள் நடந்தன. அனைத்து தேர்வுகளும் முடிவுற்றதையடுத்து டிச.,24 முதல் 2025 ஜன.,1 வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து பள்ளிகளும் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியருக்கு மூன்றாம் பருவ பாட புத்தகங்களும், நோட்டுகளும், சீருடைகளும் வகுப்பு ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டன.
03-Jan-2025