உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருள் வினியோகம்

தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருள் வினியோகம்

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள ரேஷன் கடைகள் சார்பில், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்தி-றனாளி களுக்கு, அவர்களின் நலன் கருதி வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று, ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும், 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் நேற்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன.மாதந்தோறும், இரண்டாவது சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை-களில் தாயுமானவர் திட்டத்தில், 70 வயதுக்கு மேற்பட்ட முதிய-வர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என, ஏற்கனவே அறிவித்திருந்தனர்.இந்த மாதம், 20ல் தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ளதால், ரேஷன் பொருட்கள் முன்னதாக கிடைக்க, முதல் வார சனிக்கி-ழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் பொருட்கள் வழங்க திட்-டமிடப்பட்டது. அதன்படி, கடந்த, இரண்டு நாட்களாக அனைத்து இடங்களிலும் உள்ள, 70 வயது முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நேர-டியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ