உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக குழு கூட்டம்

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக குழு கூட்டம்

நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துவங்கி செயல்பட துவங்கி உள்ளது. கூட்டுறவு வங்கி தலைமையிடத்தில், ஏழாவது நிர்வாக குழு கூட்டம், நேற்று நடந்தது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., தலைமை வகித்தார். துணைத்தலைவரான பொன்னுசாமி எம்.எல்.ஏ., முன்னிலையில் நிர்வாக குழு கூட்டம் நடந்தது.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் சதீஸ்குமார், உதவி பொது மேலாளர் சேகர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், செல்வகுமார், மாயவன், அசேக்குமார், நவலடி, ராணி பெரியண்ணன், ஜோதிலட்சுமி, ராஜேந்திரன், கவுரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வங்கியின் அடுத்த கட்ட வளர்ச்சி பனிக்காக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள், கூட்டுறவு சார் பதிவாளர் குமாரி மோகனா, கூட்டுறவு ஒன்றிய சார் பதிவாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ