உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சமயசங்கிலி தடுப்பணையில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

சமயசங்கிலி தடுப்பணையில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, சமயசங்கிலி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு, தண்ணீர் தேக்கி மின் உற்பத்தி நடந்து வருகிறது. நேற்று மதியம், கலெக்டர் உமா, சமயசங்கிலி தடுப்பணை நீர்த்தேக்க பகுதி மற்றும் அதை பகுதியை ஒட்டியுள்ள நில விபர பட்டியல் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, மின் உற்பத்தி, தடுப்பணையில் எவ்வளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது போன்ற விபரங்களை கேட்டறிந்தார்.முன்னதாக, படவீடு டவுன் பஞ்.,க்குட்பட்ட அல்லிநாயக்கன்பாளையம் பகுதியில் பட்டா வரன்முறை செய்வது குறித்து ஆய்வு செய்தார். மேலும், கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்தார். அப்போது, கடைகளில் பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்க வைத்திருந்த, பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 'நெகிழி' பைகளுக்கு மாற்றாக துணி பைகளை உபயோகப்படுத்த அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை