மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி போட்டி
08-Oct-2026
நாமக்கல்:தென்னிந்திய அறிவியல் கழகம், ஆண்டு தோறும், தென்னிந்திய அறிவியல் கண்காட்சிக்கான, மாவட்ட அளவிலான போட்டிகள் மற்றும் தென்னிந்திய அளவிலான அறிவியல் நாடக போட்டிகளை நடத்தி வருகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான மாவட்ட அளவிலான கண்காட்சி மற்றும் நாடக போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திருஞானம் முன்னிலை வகித்தார். அதில், மாவட்டம் முழுவதும் இருந்து, பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றன. மேலும், அறிவியல் நாடகத்திற்கு, ஆறு பள்ளிகளில் இருந்து, ஆறு குழுக்கள் பங்கேற்றன.கண்காட்சி மற்றும் நாடகத்திற்கு, தனித்தனி நடுவர்கள் நியமிக்கப்பட்டு, போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவில் நடக்கும் கண்காட்சி மற்றும் நாடகத்தில் பங்கேற்பர்.
08-Oct-2026