தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி ஆலோசனை, அறிமுக கூட்டம்
நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்-பாட்டு அணி அறிமுக கூட்டம், கிழக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் முரளி வரவேற்றார். எம்.எல்.ஏ., ராமலிங்கம், மேயர் கலாநிதி, கிழக்கு நகர செயலாளர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., தலைமை வகித்து பேசியதாவது: ஒருங்-கிணைந்த ஒன்றியம், நகரம், மண்டல அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளை, ஜன., 3ல் தொடங்கி, 9 வரை நடத்த வேண்டும். அதில் கிரிக்கெட், வாலிபால், கபடி, கால்பந்தாட்டம், ஓட்டப்பந்தயம், மிதிவண்டி போட்டி, கோ-கோ என, ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி-யாக, ஒவ்வொரு பிரிவினருக்கும் குறைந்த-பட்சம் தலா, 3 போட்டிகளை நடத்த வேண்டும். எந்தெந்த விளையாட்டு போட்டி நடத்துவது என்-பதை, மாவட்ட செயலாளர், ஒன்றிய, நகர பகுதி செயலாளர்களுடன் ஆலோசனை செய்து முடிவு செய்ய வேண்டும். கலந்துகொள்ளும் அனைத்து அணிகளும் www.diravidapongal.inஎன்ற இணையத-ளத்தில் பதிவு செய்ய வேண்டும். வெற்றி பெற்ற அணிகளை கொண்டு, ஜன., 10ல் தொடங்கி, பொங்கல் திருவிழா வரை நடத்தி பரிசு வழங்க வேண்டும். மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணிகளை கொண்டு பிப்., மாதத்தில் மாநில அளவிலான பிரமாண்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்-படும். இவ்வாறு அவர் பேசினார்.