எஸ்.ஐ.ஆர்.,ஐ கண்டித்து நாளை தி.மு.க., ஆர்ப்பாட்டம்
நாமக்கல்: நாமக்கல், மோகனுார் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயம், பேராசிரியர் கூட்டரங்கில், எஸ்.ஐ.ஆர்.,ஐ கண்டித்து, தி.மு.க., கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஆலோ-சனை நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., தலைமை வகித்தார்.எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நாமக்கல்லில், நாளை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமை கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து, எம்.பி., ராஜேஸ்குமார் பேசினார். இதில், எவ்வளவு பேர் கலந்து கொள்-வது, எங்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்-பட்டது. கூட்டத்தில், தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும், 'இண்டி' கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.