உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாட்டுக்கோழி விலை உயர்வு

நாட்டுக்கோழி விலை உயர்வு

ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான்பேட்டையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கி-ழமை காலை, 5:00 மணிக்கு நாட்டுக்கோழி சந்தை கூடுவது வழக்கம். ப.வேலுார் சுற்று வட்டார பகுதியில் நாட்டுக்கோழி-களை அதிகளவில் வளர்த்து வருகின்றனர்.அதன்படி, நேற்று கூடிய சந்தையில், பரமத்தி, ப.வேலுார், மோகனுார், நாமக்கல், திருச்செங்கோடு, கந்தம்பாளையம் உள்-ளிட்ட பகுதிகளில் இருந்து நாட்டுக்கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.கடந்த வாரம், நாட்டுக்கோழி கிலோ, 400 ரூபாய்க்கு விற்றது. தற்போது, கிலோவுக்கு, 100 ரூபாய் கூடுதலாகி, 500 ரூபாய்க்கும், கிராஸ் நாட்டுக்கோழி, 270 ரூபாய்க்கு விற்றது, 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. புரட்டாசியையொட்டி பக்தர்கள் விரதம் இருப்பதால் வீடுகளில் அசைவத்தை சமைப்ப-தில்லை.இதனால், சில வாரங்களாக நாட்டுக்கோழி விலை சரிந்து வருகி-றது. அதனால், நேற்று விவசாயிகள், வியாபாரிகள் நாட்டுக்கோ-ழியை அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரவில்லை. ஆனால், வாடிக்கையாளர்கள் அதிகளவில் வந்ததால், நாட்டுக்-கோழி விற்பனை சூடு பிடித்து விலை அதிகரித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை