உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நெஞ்சு வலியால் டிரைவர் உயிரிழப்பு

நெஞ்சு வலியால் டிரைவர் உயிரிழப்பு

புதுச்சத்திரம், ராசிபுரம் அருகே, குருக்கபுரத்தில் தனியார் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், கடந்த, 10 ஆண்டாக அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ், டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று தங்கராஜ் பள்ளியில் இருக்கும்போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். புதுச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை