லாரி மீது சரக்கு வாகனம் மோதி டிரைவர் படுகாயம்
குமாரபாளையம், கோவை, மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் குமார், 27; லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு, சேலம்-கோவை புறவழிச்சாலை, அருவங்காடு பகுதியில், 'ஈச்சர்' சரக்கு வாகனத்தை ஓட்டிச்சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னால் அதிவேகமாக சென்ற லாரி டிரைவர், திடீரென வேகத்தை குறைத்தார். இதனால், லாரிக்கு பின்னால் வந்த சரக்கு வாகனம் நிலைதடுமாறி, லாரியின் பின்புறம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த குமார், ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்துக்கு காரமான லாரி நிற்காமல் சென்றுவிட்டது. இதுகுறித்து, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.