உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குடிபோதையில் கிணற்றில் விழுந்த லாரி டிரைவர் பலி

குடிபோதையில் கிணற்றில் விழுந்த லாரி டிரைவர் பலி

ப.வேலுார், நாமக்கல் மாவட்டம், நல்லுார் அருகே சுங்கக்காரன்பட்டியை சேர்ந்த ராஜகோபால் மகன் மூர்த்தி, 35; லாரி டிரைவர். இவரது மனைவி மோகனா, 31; நேற்று முன்தினம் மாலை, கூடச்சேரி செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்ற மூர்த்தி, மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்களிடம் விசாரித்தும் மூர்த்தி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றின் மீது, மூர்த்தி மது போதையில் படுத்திருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சந்தேகத்தின் பேரில், நாமக்கல் தீயணைப்பு துறையினர், கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது, நீரில் மூழ்கி இறந்த மூர்த்தி உடலை மீட்டனர். இதுகுறித்து நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ