உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போதையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர் பலி

போதையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர் பலி

எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், வரகூரை சேர்ந்தவர் பொன்னுசாமி, 40; விவசாயி. கடந்த, 30ல் குடும்ப பிரச்னை காரணமாக, ‍அதிகளவில் மது குடித்துவிட்டு வீட்டில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனக்கு தானே ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக சேலத்தில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி