மேலும் செய்திகள்
தொடர் மழையால் மஞ்சள் ஏலம் ரத்து
16-Oct-2024
15 நாட்களுக்கு பின் மஞ்சள் ஏலம் துவக்கம்
23-Oct-2024
நாமகிரிப்பேட்டை: மஞ்சள் வரத்து குறைந்த தால், நாமகிரிப்பேட்டை ஆர்.சி.எம்.எஸ்.,சில் நேற்று நடக்க இருந்த ஏலம் ரத்து செய்யப்பட்டது. ஈரோட்டிற்கு அடுத்த பெரிய மஞ்சள் மார்க்கெட்டான, நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஆர்.சி.எம்.எஸ்.,சில் செவ்வாய்க் கிழமை தோறும் மஞ்சள் ஏலம் நடக்கிறது. இங்கு, 17 தனியார் மண்டிகள் மற்றும் ஆர்.சி.எம்.எஸ்., உள்ளன. கடந்த வாரம் மஞ்சள் ஏலத்தில், 221 மூட்டை மஞ்சள், 19 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று நடந்த ஏலத்திற்கு, மஞ்சள் வரத்து மிகவும் குறைவாக வந்திருந்ததால், ஏலம் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து, ஆர்.சி.எம்.எஸ்., அலுவலர்கள் கூறியதாவது: மஞ்சள் சீசன் தை மாதத்திற்கு பின் தான் தொடங்கும். அப்போது தொடங்கினால், ஆறு மாதத்திற்கு மஞ்சள் வரத்து இருக்கும். அதன்பின், கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும். அதன்படி, தற்போது சீசன் முடிந்துவிட்டதால், கடந்த மாதம் முதல் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. இருப்பு வைத்திருந்த மஞ்சளையே விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். அதுவும் குறைவாக வருவதால், இரண்டு வாரத்திற்கு ஒருமுறை தான் மஞ்சள் ஏலம் நடத்தும் சூழல் உள்ளது. அடுத்த வாரம் மஞ்சள் ஏலம் வழக்கம்போல் நடக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
16-Oct-2024
23-Oct-2024