மேலும் செய்திகள்
'மாருதி, கியா' நிறுவனங்கள் ஏற்றுமதியில் சாதனை
26-Nov-2024
நாமக்கல்:முட்டை வரலாற்றில் உச்சபட்ச விலையாக, 590 காசு நிர்ணயம் செய்துள்ள நிலையில், ஏற்றுமதி, 50 சதவீதம் சரிந்துள்ளது. அதனால், ஏற்றுமதியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.நாமக்கல் மண்டலத்தில், 1000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 7 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம் தினமும், 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.கடந்த, நவ., 1ல் கொள்முதல் விலை, 540 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்து, கடந்த, 3ல், 590 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை வரலாற்றில், உச்சபட்ச விலையாக நிர்ணயம் செய்யப்பட்டது. விலை உயர்வு காரணமாக, ஏற்றுமதி சரிந்துள்ளது. இதுகுறித்து, முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் பன்னீர்செல்வம் கூறியதாவது:முட்டை ஏற்றுமதி தினமும், 40 லட்சம் இருந்த நிலையில், தற்போது, 50 சதவீதம் குறைந்து, 20 லட்சமாக சரிந்துள்ளது. கொள்முதல் விலை குறைந்தால் தான் ஏற்றுமதி அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினர்.
26-Nov-2024