மேலும் செய்திகள்
இறந்தவர் யார் போலீஸ் விசாரணை
27-Oct-2025
பள்ளிப்பாளையம்,பள்ளிப்பாளையம் அருகே வெப்படை பிரிவு சாலையில், நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத, 65 வயது முதியவர் சாலையில் நடந்து சென்றார். அப்போது, ஏதிரே வேகமாக வந்த வாகனம் ஒன்று, முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. விபத்தில் படுகாயமடைந்த முதியவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்தார். இறந்த முதியவர் யார் என தெரியவில்லை. அதேபோல் மோதி விட்டு சென்றது எந்த வாகனம் என தெரியவில்லை.
27-Oct-2025