உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விபத்தில் மூதாட்டி பலி

விபத்தில் மூதாட்டி பலி

மல்லசமுத்திரம்:ராசிபுரம் அருகே, அளவாய்ப்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன், 66, பூங்கோதை, 62, தம்பதியர். இவர்கள், நேற்று மாலை, 5:45 மணியளவில், அளவாய்பட்டியில் இருந்து வேலகவுண்டம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு, 'ஹோண்டா ஆக்டிவா' டூவீலரில் சென்றனர்.மல்லசமுத்திரம் அருகே, மொரங்கம் காட்டூர் பகுதியில் வேகத்தடை மீது ஏறி இறங்கியபோது, பின்னால் வந்த, 'டெம்போ' மோதியது. இதில், பூங்கோதை கீழே விழுந்ததில், அவரின் தலையில் பலத்த அடிபட்டது. அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி