உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோரிக்கைகளை வலியுறுத்தி மா.திறனாளிகள் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி மா.திறனாளிகள் போராட்டம்

மோகனுார்: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, மோகனுார் தாலுகா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் தாலுகா தலைவர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார்.நாமக்கல் கலெக்டர், ஆர்.டி.ஓ., தலைமையில், குறை தீர்ப்பு கூட்டம் முறையாக நடத்த வேண்டும். அனைத்து பஞ்.,களிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பயனாளிகளுக்கு, தொடர்ச்சியாக, 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும்.மாற்றுத்திறனாளிகளை, நான்கு மணி நேரத்தில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். வீட்டுமனை இல்லாத மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும். மோகனுார் டவுன் பஞ்.,ல், 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் மணிகண்டன், கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை