இன்ஜினியரிங் கவுன்சிலிங் 2ம் சுற்று நிறைவு
சென்னை, இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாவது சுற்று கலந்தாய்வு, இன்றுடன் நிறைவு பெறுகிறது. அண்ணா பல்கலை கீழ் இயங்கும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர்வதற்கான, இரண்டாவது சுற்று கலந்தாய்வு, 26ம் தேதி துவங்கி, இன்றுடன் முடிகிறது. இதில், 178.965 முதல் 143.085 வரை, 'கட்-ஆப்' மதிப்பெண்கள் எடுத்து, தரவரிசை பட்டியலில், 39,146 முதல் 1 லட்சத்து, 37,710 வரை பிடித்த, 98,565 மாணவர்கள் பங்கேற்றனர். பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு ஆகியவற்றுடன் சேர்த்து, 80,650 மாணவர்களுக்கு, இரண்டாம் சுற்றில், தற்காலிக ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன.தற்காலிக ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள், இன்று மாலை 5:00 மணிக்குள் தாங்கள் தேர்ந்தெடுத்த கல்லுாரியை இறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், நாளை காலை 10:00 மணிக்கு ஒதுக்கீடு ரத்தாகும்.