மேலும் செய்திகள்
அ.தி.மு.க., சார்பில்நீர்மோர் பந்தல் திறப்பு
18-Apr-2025
நாமக்கல்: நாமக்கல் மாநகர அ.தி.மு.க., செயற்குழு கூட்டம், மாநகர செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பாஸ்கர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், வரும், 12ல் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான இ.பி.எஸ்., பிறந்த நாளை, நாமக்கல் நகரில் சிறப்பாக கொண்டாடுவது என, தீர்மானம் நிறை-வேற்றப்பட்டது. மேலும், மாநகர செயலாளர் பாஸ்கர் தலைமையில், பெண்கள் பால்-குடம் எடுத்து, நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து பொதுமக்களுக்கு, மாநகர தகவல் தொழில் நுட்ப அணி மற்றும் இளைஞர் இளம் பெண்கள் பாசறை சார்பில், அன்னதானம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதேபோல், வரும், 12ல், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்க தேரோட்டம் நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்-பட்டன.மாநில பொதுக்குழு உறுப்பினர் மயில் சுந்தரம், நாமக்கல் மேற்கு ஒன்றிய செய-லாளர் சேகர், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா செல்வகுமார், புதுச்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கோபிநாத், மோகனுார் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மோகனுார் நகர செயலாளர் ராஜவடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
18-Apr-2025