தி.கோட்டில் இ.பி.எஸ்., உருவபொம்மை எரிப்பு
திருச்செங்கோடு, இ.பி.எஸ்.,சை கண்டித்து, நாமக்கல் மேற்கு மாவட்ட தமிழ் புலிகள் கட்சி சார்பில், அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதுாறாக பேசிய கோவை சத்யன் மீது நடவடிக்கை எடுக்காத, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,யை கண்டித்து, நாமக்கல் மேற்கு மாவட்ட தமிழ் புலிகள் கட்சி சார்பில், திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட், அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில துணை பொதுச்செயலாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். அதில், கோவை சத்தியனையும், எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்.,சையும் கண்டித்து கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, இ.பி.எஸ்.,சின் உருவ பொம்மையை எரித்தனர். அங்குவந்த போலீசார், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.