உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நித்திய சுமங்கலி மாரியம்மன் மகா காளி அலங்காரத்தில் ஊர்வலம்

நித்திய சுமங்கலி மாரியம்மன் மகா காளி அலங்காரத்தில் ஊர்வலம்

. ராசிபுரம், நவ. 19-ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த, 22ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியதுபூவோடு எடுக்கும் நிகழ்ச்சி, 5ல் கொடியேற்றம் நிகழ்ச்சி, 7 காலை, தீமிதி விழா, மாலை தேரோட்டம் நடந்தது. 9ல் சத்தாபரணம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. ஆனால், அம்மனை நகர்வலம் அழைத்து செல்லும் மண்டப கட்டளை மற்றும் விடையாற்றி கட்டளை, நவ., 24 வரை நடக்கிறது.கடந்த மாதம், 23 முதல் மண்டப கட்டளை நிகழ்ச்சி தொடங்கியது. தினமும் ஒவ்வொரு சமூகத்தினர் சார்பில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடத்தப்பட்டு, இரவு புஷ்ப பல்லக்கில் சுவாமி ஊர்வலம் நடந்து வருகிறது. 9ல் மண்டப கட்டளை நிறைவடைந்தது. 11 முதல் விடையாற்றி கட்டளை நடந்து வருகிறது.நேற்று இரவு, மகா காளி அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம், பிள்ளைமார் சார்பில் தீர்த்தக்குட ஊர்வலம், சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ