உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சிறு மழைக்கே சாலையில் தேங்கும் மழைநீரால் அவதி

சிறு மழைக்கே சாலையில் தேங்கும் மழைநீரால் அவதி

வெண்ணந்துார்: வெண்ணந்துார் சுற்றுவட்டார பகுதியில், சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. ஆலம்பட்டி பஞ்.,க்குட்பட்ட ராசிபுரம்-ஆட்டையாம்பட்டி நெடுஞ்சாலை, மேட்டு மிஷின் பகுதியில் இருந்து ஆலம்பட்டி குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் வழியில், கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால், மழைநீருடன் கலந்த கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் குளம்போல் தேங்கியுள்ளது.சாலையில் சென்றவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மீண்டும், கனமழை பெய்தால், இப்பகுதியில் தாழ்வாக உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகும் நிலையுள்ளது. எனவே, சாலையில் தேங்கும் மழைநீரை அகற்ற, ஆலம்பட்டி பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை