வரும் சட்டசபை தேர்தலில் மெகா கூட்டணி முன்னாள் அமைச்சர் தங்கமணி தகவல்
வரும் சட்டசபை தேர்தலில் மெகா கூட்டணிமுன்னாள் அமைச்சர் தங்கமணி தகவல்பள்ளிப்பாளையம், அக். 17-''சட்டசபை தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கப்படும்,'' என, பள்ளிப்பாளையத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தங்கமணி எம்.எல்.ஏ., தெரிவித்தார்.பள்ளிப்பாளையம் நகரம், பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றியம், மற்றும் ஆலாம்பாளையம் டவுன் பஞ்., அ.தி.மு.க., சார்பில் ஆலோசனை கூட்டம், ஒன்றிய அவைத் தலைவர் மாரப்பன் தலைமையில் நடந்தது. நகர செயலாளர் வெள்ளிங்கிரி வரவேற்றார். ஒன்றிய செலாளர் செந்தில் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் முன்னாள அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி பேசியதாவது: மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி வர வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். 2026 ஆண்டு நிச்சயமாக அ.தி.மு.க., ஆட்சி அமையும் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. நடந்து முடிந்த பார்லி., தேர்தலை பற்றி கவலைபடாமல், வர இருக்கும் சட்டசபை தேர்தலுக்கு நாம் தயாராக வேண்டும். சாயக் கழிவுநீரால் ஆற்று தண்ணீர் மாசடைவதால், மேட்டூரில் இருந்து, குமாரபாளையம், திருச்செங்கோடு தொகுதிக்கு புதிய குடிநீர் திட்டம், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் எதையும் செய்ய வில்லை.பள்ளிப்பாளையம் பகுதி விசைத்தறி தொழில் நிறைந்த பகுதியாகும். இந்த விசைத்தறியில், 50 சதவீதம் இலவச வேட்டி, சேலை ஓடும். மீதியுள்ள 50 சதவீதம் விசைத்தறியில் வேட்டி, லுங்கி, துண்டு, போன்றவை ஓடும். இதனால் வருடம் முழுவதும் வேலை இருந்தது. ஆனால், தி.மு.க., ஆட்சியில் விசைத்தறிகள் எல்லாம் காயலாங் கடைக்கு செல்லும் நிலை உருவாகி விட்டது.இன்றை தினம் போதை பொருள் அதிகரித்து விட்டது. இதை கட்டுபடுத்த இந்த அரசு தவறி விட்டது. தமிழகத்தில் போதை பொருள் அதிகரித்து விட்டதால் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கப்படுகிறது. 200 தொகுதியிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும். டீ கடையில் தான் அரசியல் ஆரம்பிக்கிறது. அங்கு பேசுகின்ற பேச்சு தான் மக்களின் எண்ணங்களாக உள்ளது. அங்கு நமது கட்சியை சேர்ந்தவர்கள் நம்பிக்கையுடன் பேச வேண்டும். இவ்வாறு பேசினார்.ஆலாம்பாயைம் டவுன் பஞ்., செயலாளர் செல்லதுரை நன்றி கூறினார்.