மேலும் செய்திகள்
செஞ்சி சாணக்யா பள்ளி மாணவர்கள் 'சென்டம்'
09-May-2025
நாமக்கல், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், பிளஸ் 2 தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.வேலகவுண்டம்பட்டி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், இந்தாண்டு பிளஸ் 2 படித்த மாணவியர் சரண்யா, இந்து ஆகியோர், 600க்கு, 589 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளனர். இதேபோல், மாணவியர் சிலேகா, சுஷ்மிகா ஆகியோர், தலா, 588 மதிப்பெண் பெற்று, 2ம் இடம்; மாணவர் கவின், 586 மதிப்பெண் பெற்று, 3ம் இடம் பிடித்தனர். இப்பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.கணிதத்தில், 6 பேர், வேதியியலில், 2 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில், 29 பேர், வணிகவியல் மற்றும் பொருளியலில் தலா ஒருவர், வணிக கணிதம், புள்ளியியல் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் தலா, இரண்டு பேர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, பள்ளி தலைவர் ராஜா, தாளாளர் டாக்டர் ராஜன், மெட்ரிக் பள்ளி ஆலோசகர் ராஜேந்திரன், செயலாளர் சிங்காரவேலு, இயக்குனர் ராஜராஜன், முதல்வர் சாரதா, ஆசிரியர்கள் பாராட்டினர்.
09-May-2025