உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சேந்தமங்கலம் அருகே பொட்டணம் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து விற்பனை

சேந்தமங்கலம் அருகே பொட்டணம் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து விற்பனை

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, பொட்டணம் ஏரியில், நிர்ணயித்த அளவை விட அதிகளவில் வண்டல் மண் எடுத்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.சேந்தமங்கலம் யூனியன், பொட்டணம் பஞ்., சுற்றிலும் பழைய-குளம், சாலையூர் ஏரி, கருப்பனாங்குளம் உள்ளிட்ட, 5க்கும் மேற்-பட்ட ஏரி, குளங்கள் உள்ளன. இந்த ஏரி, குளங்களை சுற்றி ஏரா-ளமான விவசாய கிணறுகள் உள்ளதால், இந்த கிணற்று பாச-னத்தை நம்பி ஏராளமான விவசாயிகள் மரவள்ளி, மக்காச்-சோளம், பருத்தி உள்ளிட்டவை பயிரிட்டு வருகின்றனர். இந்நி-லையில், மழைக்காலங்களில் அதிக மழை பெய்தால், மழைநீர் இந்த ஏரிகளுக்கு வரும் வகையில் நீர்வழிப்பாதை உள்ளது. கடந்-தாண்டு பெய்த மழையால் இந்த ஏரிகளில் தண்ணீர் தேங்கி நின்-றது. இந்த தண்ணீரால் பொட்டணத்தை சுற்றியுள்ள விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்ததால், பல்வேறு பயிர்கள் நடவு செய்தனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக பொட்டணத்தை சுற்றியுள்ள ஏரி, குளங்களில் விவசாய பயன்பாடு என்ற பெயரில் அனுமதி பெற்று மண் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.அரசு, விவசாயத்திற்கு ஏரி, குளங்களில் வண்டல் மண் ‍எடுக்-கலாம் என தெரிவித்துள்ள நிலையில், இதை சாதகமாக பயன்ப-டுத்திய சிலர், சலையூர் ஏரி, பழைய ஏரியில் அரசு நிர்ணயம் செய்த அளவை விட அதிகளவில் மண் வெட்டி எடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், கடந்த, மூன்று நாட்களாக கருப்-பணார் குட்டையில் தினமும், 20க்கும் மேற்பட்ட லாரிகளில் வண்டல் மண் அனுமதி அளவை மீறி எடுத்து செல்வதாகவும், தடுக்க வேண்டும் எனக்கோரி தாசில்தார் உள்ளிட்ட பலருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கையில்லை என விவசாயிகள் தெரி-விக்கின்றனர்.இதுகுறித்து, தாசில்தார் வெங்கடேசன் கூறுகையில, ''பொட்-டணம் குளத்தில் விவசாய பணிக்கு வண்டல் மண் அள்ள அனு-மதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மண் எந்த அளவில் எடுக்க ‍வேண்டும் என்பதை பி.டி.ஓ., தான் கண்காணிக்க வேண்டும், மற்றபடி குட்டையில் மண் எடுப்பது குறித்து புகார் ஏதும் வரவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ