உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உழவரை தேடி வேளாண்மை விவசாயிகளுக்கு விளக்கம்

உழவரை தேடி வேளாண்மை விவசாயிகளுக்கு விளக்கம்

ராசிபுரம், ராசிபுரம் யூனியன், பொன்குறிச்சி கிராமத்தில், 'உழவரை தேடி வேளாண்மை' என்ற பெயரில், நேற்று உழவர் நலத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட வேளாண் துணை இயக்குனர் மணிமேகலா தேவி தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ''கிராமங்களுக்கு நேரடியாக சென்று உழவர்களை சந்தித்து வேளாண்மையை அடுத்தக்கட்ட நிலைக்கு எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிர் சார்ந்த தொழில்நுட்பங்களை வேளாண்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் எடுத்துக்கூறுவதே இம்முகாமின் நோக்கம்,'' என்றார்.ராசிபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் தனலட்சுமி, 'உயிர் உரங்கள், நுண்ணுாட்டம், சொட்டுநீர் பாசனம்' குறித்து பேசினார். வேளாண் பொறியியல் துறை அலுவலர் பிரபா மற்றும் தோட்டக்கலை அலுவலர் சுப்பிரமணியம், கால்நடை பராமரிப்புத்துறை ஆய்வாளர் தமிழ்செல்வன், வேளாண் விற்பனை மற்றும் வணிகம் பூங்கொடி ஆகியோர் கலந்துகொண்டு, அரசு திட்டங்களை குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ