மேலும் செய்திகள்
16 உதவி இயக்குனர்கள் இடமாறுதல்
04-Jan-2025
குமாரபாளையம்: வேளாண் துறை சார்பில், குமாரபாளையம் அருகே, வீரப்பம்பாளையத்தில், தமிழக நீர்வள நிலவள திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு நெல் குறித்து பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி தலைமை வகித்தார்.தோட்டக்கலை உதவி இயக்குனர் குணசேகரன், நெற்பயிரில் ஏற்படும் நோய், பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பு, கட்டுப்படுத்தும் முறை, அறுவடைக்கு பின் செய்ய வேண்டிய தொழில்நுட்பம், நெல் விதை பராமரிக்கும் முறை குறித்து பேசினார். துணை வேளாண்மை அலுவலர் மாயாஜோதி, கோடை பட்டம் விதைப்பு, விதைகளின் இருப்பு நிலை, இடுபொருட்களின் மானிய திட்டம் குறித்து பேசினார். உதவி வேளாண்மை அலுவலர் நிஷா, நுண்ணீர் பாசனம், மண்புழு வளர்ப்பு, பயிர் காப்பீடு, பிரதமரின் கவுரவ நிதி, உழவன் செயலியில் தமிழ் மண் வளம், மானிய திட்டங்கள் குறித்து பேசினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் கிருபா பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
04-Jan-2025