கார் மோதி விவசாயி பலி
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் யூனியன், ரெட்டிபுதுாரை சேர்ந்தவர் பழனியப்பன், 73; விவசாயி. இவர், தோட்டத்தில் பயிரிட்ட மக்காச்சோளத்தை எடை போடுவதற்காக, ரெட்டிப்புதுார் பைபாஸ் சாலையை டூவீலரில் கடந்துள்ளார். அப்போது, அதிவேகமாக வந்த கார், இவர் மீது மோதியது. இந்த விபத்தில் பழனியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புதுச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.