மரவள்ளிக்கு உரிய விலை விவசாயிகள் கோரிக்கை
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பேளுக்குறிச்சி, வெட்டுக்காடு, பச்சுடையாம்பட்டி புதுார், செங்காளிக்கவுண்டனுார் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். இந்தாண்டு போதிய மழை பெய்து, தண்ணீர் கிடைத்ததால் மரவள்ளி சாகுபடி அதிகரித்துள்ளது. தற்போது விவசாயிகள் மரவள்ளி அறுவடையை தொடங்கி உள்ளனர். அறுவடை செய்யும் மரவள்ளி கிழங்குகளை, விவசாயிகளிடம் வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து நாமகிரிப்பேட்டை, ஆத்துார் பகுதியில் உள்ள சேகோ பேக்டரிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். எனவே, மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.