உழவர் பேரியக்கம் ஆலோசனை
உழவர் பேரியக்கம் ஆலோசனைநாமக்கல், டிச. 2-நாமக்கல்லில், உழவர் பேரியக்க ஆலோசனை கூட்டம் மற்றும் பா.ம.க., பொறுப்பாளர்கள் செயற்குழு கூட்டம் நடந்தது. தமிழ்நாடு உழவர் பேரியக்க துணை செயலாளர் பொன் ரமேஷ் தலைமை வகித்தார்.மாநில துணை செயலாளர் வேலுசாமி பங்கேற்றார். கூட்டத்தில், தி.மு.க., அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது. விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தடுமாறுகின்றனர். அதனால், 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலில், பா.ம.க., அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். வரும், 21ல் திருவண்ணாமலையில் நடக்க உள்ள உழவர் பேரியக்க மாநில மாநாட்டில், நாமக்கல் மாவட்டத்திலிருந்து, 10,000 பேர் கலந்து கொள்வது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட கவுன்சிலர் வடிவேல், மாவட்ட செயலாளர் சுதாகர், மாவட்ட தலைவர் தினேஷ் பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.