தீவன சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையத்தில் வெப்படை, சவுதாபுரம், பாதரை, மக்கிரி-பாளையம், வெள்ளிக்குட்டை உள்ளிட்ட பகுதிகள் விவசாயம் நிறைந்தவை. இப்பகுதி விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் ஈடு-பட்டு வருகின்றனர். கால்நடைக்கு தேவையான தீவனத்தை சாகு-படி செய்ய, பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்-போது, பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், தீவன சாகு-படி செய்ய, வயலில் உழும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.சாராயம் பதுக்கியவர் கைதுபள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, அப்பநாய்க்கான்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன், 52; விவசாயி. இவர், வீட்டில், 10 லிட்டர் சாராயத்தை பதுக்கி விற்பனை செய்து வந்துள்ளார். தகவ-லறிந்து, ஓரிரு நாட்களுக்கு முன் பள்ளிப்பாளையம் போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்த மனோகரன், தப்பி சென்று விட்டார். வீட்டில் இருந்த சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக இருந்த மனோகரனை, நேற்று போலீசார் கைது செய்தனர்.