உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நெல் சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்

நெல் சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்

வெண்ணந்துார், வெண்ணந்துார் ஒன்றியம், அளவாய்ப்பட்டி, ஓ.சவுதாபுரம், அக்கரைப்பட்டி, மதியம்பட்டி நாச்சிப்பட்டி, அத்தனுார், தேங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதி-களில், சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வெங்காயம், பருத்தி வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதேசமயம், நெல் நடவு செய்ய உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், விவசாயிகள் பயிர் நடவு பணியை தொடங்கியுள்ளனர்.வெண்ணந்துார் பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் நெல் நடவு பணி தொடங்கியுள்ளது. தற்போது, மாலை, இரவில் துாறல் மழை பெய்தாலும், விவசாயிகள் நெல் நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். மழைக்காலத்தில் கூலியாட்கள் கிடைக்கவில்லை என்றாலும், விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் தாங்களே நடவு பணியை செய்து வருகின்றனர். சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என்பதால், நெல் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை