உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மருமகளை கொலை செய்த மாமனார் கைது

மருமகளை கொலை செய்த மாமனார் கைது

நாமகிரிப்பேட்டை நாமகிரிப்பேட்டை அருகே, ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த மாமனாரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே, சின்ன அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மனைவி அருள்ஜோதி, 35; கூலித்தொழிலாளி. இரண்டாண்டுகளுக்கு முன் கணவர் மாரிமுத்து இறந்துவிட்டார். இதனால், 13, 14 வயதுடைய, இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். மாமனார் சேட்டு, 65, என்பவர், அருள்ஜோதிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்னையில், அருள்ஜோதி மகள்களுடன் சின்ன அரியாகவுண்டம்பட்டிக்கு இடம்பெயர்ந்தார். முள்ளுக்குறிச்சியில் சேட்டு வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அருள்ஜோதியிடம் சேட்டு தவறாக நடக்க முயன்றுள்ளார்.அப்போது, ஏற்பட்ட தகராறில் சேட்டு, அருள்ஜோதியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி தலைமறைவானார். சிகிச்சைக்கு செல்லும் வழியில் அருள்ஜோதி இறந்தார். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், சேட்டுவை பிடிக்க நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டி, ராசிபுரம், பேளுக்குறிச்சி உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட போலீசாருடன், நான்கு தனிப்படை அமைக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று மாலை, நாமகிரிப்பேட்டை அடுத்த கொங்களம்மன் கோவில் பகுதியை ஒட்டியுள்ள ஓடையில் சேட்டு பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. அங்கு சென்ற நாமகிரிப்பேட்டை போலீசார், சேட்டுவை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ