உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் நாளை திருவிழா

கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் நாளை திருவிழா

எலச்சிபாளையம்:எலச்சிபாளையம், கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரையில் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு திருவிழா, கடந்த, 22ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 25ல், பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று விளக்கு பூஜை மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது. நாளை காலை, 8:00 மணிக்கு, பொங்கல் வைத்தல், பால்குடம், தீர்த்தக்குடம், அக்னிகரகம் எடுத்தல், கிடாவெட்டுதல், மாவிளக்கு பூஜை, அம்மன் பவனி வருதல், வாண வேடிக்கை நடக்கிறது. 2 காலை, 9:00 மணிக்கு கம்பம் கும்பம் கிணற்றில் விடுதல், மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா முடிவடைகிறது. ஏற்பாடுகளை, கண்ணனுார் மாரியம்மன் நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி