மேலும் செய்திகள்
பைக் மோதி காஞ்சி நபர் பலி
20-Jan-2025
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., வெள்ளக்கல்பட்டியை சேர்ந்தவர், 30 வயது பெண்; இவருக்கு, 3 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார், 25; பைனான்ஸ் ஊழியர். பெண்ணின் கணவர், மரவள்ளி அறுவடைக்காக வெளியூர் சென்றுவிட்டார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை, கடந்த, 31ல் சாந்தகுமார் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது சாந்தகுமார் தாக்கியதில் பாதிக்கப்பட்ட பெண், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகார்படி, நாமகிரிப்பேட்டை போலீசார், சாந்தகுமாரை கைது செய்தனர்.
20-Jan-2025