பொது வினியோக திட்ட செயல்பாடு மாவட்ட கலெக்டருக்கு முதல் பரிசு
நாமக்கல்: நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பொது வினியோக திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட, நாமக்கல் கலெக்டரை பாராட்டி, மாநில அளவில் முதல் பரிசு, விருது வழங்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழக அரசு சார்பில், மாநில அளவி-லான நுகர்வோர் பாதுகாப்பு விருதுகள் வழங்கும் விழா, நேற்று நடந்தது. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, கூட்டுற-வுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர், மாநில அளவி-லான நுகர்வோர் பாதுகாப்பு விருதுகளை வழங்கினர். விழாவில், நுகர்வோர் பாதுகாப்பு, நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பொது வினியோக திட்டம் தொடர்பான பணிகளில் சிறப்பாக செயல்-பட்ட, நாமக்கல் மாவட்டத்திற்கு, 2022-23ம் ஆண்டில் மூன்றாம் பரிசும், 2023-24ம் ஆண்டிற்கு முதல் பரிசும் வழங்கப்பட்டது. இந்த விருது, கேடயத்தை, நாமக்கல் கலெக்டர் உமாவிடம், தமி-ழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி வழங்கி பாராட்-டினார்.