மேலும் செய்திகள்
குடிசை வீடு எரிந்து சேதம்
23-Oct-2025
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், மரப்பலகை லோடுடன் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் டயர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில், லாரி உட்பட, 6 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள சங்ககிரி ரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில், கேரளாவில் இருந்து மரப்பலகைகளை ஏற்றி, ஹைதராபாத் செல்ல இருந்த, 12 சக்கரம் கொண்ட அசோக் லேலண்ட் லாரியை, திருச்செங்கோட்டை சேர்ந்த டிரைவர் நாகராஜ், 45, ஓட்டி வந்தார். லாரி உரிமையாளர் சிதம்பரம் உடன் பயணித்தார். நேற்று பகல் 1:00 மணிக்கு, திருச்செங்கோடு லாரி உரிமையாளர் சங்க பெட்ரோல் பங்க்கில் டீசல் பிடிப்பதற்காக லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு டிரைவர் கீழே இறங்கினார். அந்த சமயத்தில் திடீரெ ன லாரியின் நடுபக்க டயர் வெடித்தது. இதில், டீசல் டேங்க் சேதமடைந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. அதையடுத்து, மற்ற டயர்களும் வெடிக்க தொடங்கியவுடன், அருகில் இருந்த கடைகளுக்கு தீ பரவியது. திரு ச்செங்கோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், தீ பரவாமல் தடுக்க முயற்சித்தனர். ஆனால், தீ கட்டுக்கடங்காமல் லாரி அருகில் நிறுத்தப்பட்டு இருந்த இரு சக்கர வாகனங்கள், ஆட்டோமொபைல்ஸ் கடை க்கு பரவியது. லாரியின் டீசல் டேங்க் வெடித்து எரிந்ததாலும், மரப்பலகைகள் மளமளவென தீப்பிடித்து எரிந்ததாலும் தீயணைப்பு வீரர்கள், ஒன்றரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில், லாரி மற்றும் அதில் ஏற்றப்பட்டிருந்த பலகை முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும், 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் மற்றும் பொருட்களும் சேதமடைந்தன. பலத்த சத்தத்துடன் டயர் வெடித்து எரிந்ததாலும், எதிரில் பெட்ரோல் பங்க் இருந்ததாலும் பரபரப்பு ஏற்பட்டது.
23-Oct-2025