உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திருத்தேர் பெருவிழா நாளை கொடியேற்றம்

திருத்தேர் பெருவிழா நாளை கொடியேற்றம்

மோகனுார்: மோகனுாரில் பிரசித்தி பெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், திருத்தேர் பெருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, ஜூன், 25 முதல், ஜூலை, 1 வரை, தினமும் காலை, 8:00 மணிக்கு பல்லக்கு புறப்பாடு, இரவு, 7:00 மணிக்கு, அன்னம், சிம்மம், ஹனுமந்த, சேஷ, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்க-ளுக்கு அருள்பாலிக்கின்றார்.ஜூலை, 2 அதிகாலை, 5:15 மணிக்கு, ரதாரோஹணம் திருத்தேர் பெருவிழாவும், காலை, 9:00 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் பக்தர்களால் இழுத்து வரப்-பட்டு, நிலை அடைகிறது.ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், அறங்காவலர்கள் குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !