உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குமாரபாளையம் காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை

குமாரபாளையம் காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை

குமாரபாளையம், மேட்டூர் அணை தன் முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என்பதால், காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளை, திருச்செங்கோடு சார் ஆட்சியர் அங்கீத் குமார் ஜெயின் ஆய்வு செய்தார். பின், நகராட்சி உதவி பொறியாளர் கார்த்திக் ராஜன், தாசில்தார் சிவகுமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அப்போது, காவிரியில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் பொதுமக்கள், அரசு சார்பில் ஏற்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாம்களில் பாதுகாப்பாக தங்க வேண்டும். மேலும், தங்களின் முக்கிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு, பாதுகாப்பு மையங்களில் தங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை