உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆசிரியர்களுக்கு வனமும் வாழ்வும் பயிற்சி

ஆசிரியர்களுக்கு வனமும் வாழ்வும் பயிற்சி

ராசிபுரம், : ராசிபுரம் அடுத்த அத்தனுார் வனவியல் விரிவாக்க மையத்தில், நேற்று ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடங்கியது. கலெக்டர் துர்கா மூர்த்தி, மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ் ஆகியோர் முன்னிலையில், வனத்துறை சார்பில், 'வனமும் வாழ்வும்' என்ற தலைப்பில் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.தமிழகம் முழுவதும், வனத்துறை மூலம், 20,000 அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'வனமும் வாழ்வும்' பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 25 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, தமிழகத்தின் பல்லுயிர் பன்மயம், வனப்பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை, காட்டுயிரிகள் கணக்கெடுப்பு, மனித விலங்கு மோதல் உள்ளிட்ட தலைப்புகளில், நேற்று, இன்று என, இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெறும் ஆசிரியர்கள் மூலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 500 அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படும். ராசிபுரம் வனச்சரக அலுவலர் சத்யா, மல்லுார் வனவர் ஸ்ரீகாந்த் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ