29 ஆண்டுக்கு பின் முன்னாள் மாணவியர் சந்திப்பு ஆசிரியையிடம் பிரம்பால் அடிவாங்கி நெகிழ்ச்சி
நாமக்கல்: நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 1996ல், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 முடித்த முன்னாள் மாணவியர், '1996 நினைவுகளும், நன்றிகளும்' என்ற தலைப்பில், சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.அப்போது, முன்னாள் மாணவியர், தங்கள் பள்ளிக்கால நினைவு-களை பரிமாறிக்கொண்டனர். மேலும், தங்களது குடும்பம், குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் பின்னணி குறித்து விளக்-கினர். தொடர்ந்து, 29 ஆண்டுகளுக்கு முன், தாங்கள் பயின்ற பள்-ளியில் ஆசிரியைகள் அளித்த ஊக்குவிப்பு, கண்டிப்பு, சக தோழி-யாக நட்பு பாராட்டியது என, பல்வேறு நினைவுகளை மீண்டும் பகிர்ந்து கொண்டனர்.முன்னாள் மாணவிகள், தங்கள் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பரிசுகள் வழங்கி, அவர்கள் காலில் விழுந்து ஆசீ பெற்றனர். அப்போது, பிரம்பால் கையில், 'லேசாக' அடி வாங்கி, தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர். 'ஆசிரியர்கள் அன்று தங்களுக்கு அளித்த ஊக்குவிப்பு மற்றும் கண்டிப்பு காரணமா-கவே, இன்று தாங்கள் நல்ல நிலையில் உள்ளதாக ஆசிரியர்க-ளிடம் பெருமை பாராட்டினர். மாணவியர் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி, கண்ணீர் பெருக்குடன் தங்கள் அன்பை தெரிவித்-தனர்.முன்னாள் ஆசிரியர்கள், 60 பேர், முன்னாள் மாணவியர், 150 பேர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடு களை, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவியர் பத்மா, கவிதா ஆகியோர் செய்திருந்தனர்.