உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இலவச கண்மருத்துவ முகாம்

இலவச கண்மருத்துவ முகாம்

ப.வேலுார்:ப.வேலுார் அரிமா சங்க சார்பில், பள்ளி சாலையில் உள்ள அரிமா சங்க வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. முகாமில், கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது. கண்புரை உள்ள நோயாளிகள், அறுவை சிகிச்சை செய்வதற்காக, சேலம் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.கண் அறுவை சிகிச்சை செய்த பயனாளிகளுக்கு, 500 ரூபாய் மதிப்புள்ள லென்ஸ் இலவசமாக கொடுக்கப்படும். ப.வேலுார் அரிமா சங்க தலைவர் அருண்குமார், செயலாளர் அரசகுமார், சதீஷ்குமார், பொருளாளர் கிஷோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை