துாய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
ராசிபுரம்: ராசிபுரம் யூனியனில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம், நேற்று நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். பி.டி.ஓ., மலர்விழி முன்னிலை வகித்தார். முகாமில், இ.சி.ஜி., கர்ப்பப்பை, மார்பக புற்றுநோய், தொற்று நோய்களுக்கான பரிசோதனை, காசநோயை கண்டறிவதற்கான எக்ஸ்ரே, தொழுநோயை கண்டறிதல் ஆகிய பரிசோதனை நடந்தது. மருத்துவ அலுவலர் செல்வி, சித்த மருத்-துவர் பாலாமணி உள்ளிட்டோர் பரிசோதனை செய்தனர். முகாமில், 120 துப்புரவு பணியாளர்கள் கலந்துகொண்டு பரிசோ-தனை செய்துகொண்டனர்.